கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை – 2 வியாபாரிகள் கைது..!

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று துடியலூர் என் .ஜி .ஜி ஓ.காலனி ரயில்வே கேட்அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்குள்ள 2 பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக கே. வடமதுரை, சண்முக நகரை சேர்ந்த சிவகுமார் (வயது 47 ) என். ஜி. ஜி. ஓ. காலனி பொன்ராஜ் ( வயது 54) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குட்கா, கார், இருசக்கர வாகனங்கள் ,செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது..