தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா வேட்டை… 208.85 டன் புகையிலை பறிமுதல் : 17.2 கோடி அபராதம் -10155 கடைகளுக்கு சீல்.!!

சென்னை : புகையிலை பொருட்கள் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் காரணமாக பெரும் உடல் நல கேடுகள் ஏற்படுகின்றன.அவற்றில் முதன்மையானது நிக்கோட்டின் ஆகும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது இந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்குவத்துடன் பல்வேறு புற்றுநோய் இதயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளும் வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் புகையிலையை உட்கொள்வது குழந்தைகளின் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. புகையிலை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை ஆனது உடல் நல பாதுகாப்பு நடை முறையில் பெரும் சவாலாக விளங்குகிறது. குட்கா பான் மசாலா கூல் லிப் மற்றும் இதர புகையிலை பொருட்களின் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 பிரிவு 30(2) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மேற்படி சுவைக்க கூடிய குட்கா பான் மசாலா கூல் லீப் மற்றும் புகையிலை பொருட்களின் உற்பத்தி சேமிப்பு போக்குவரத்து விநியோகம் மற்றும் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் அதன் புழக்கத்தை தடுத்து நிறுத்த இது போதுமானதாக இல்லை. எனவே இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் உத்தரவின் படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்யவும் அது தொடர்பாக தொடர்ந்து சோதனை நடத்தவும் சுகாதாரம் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ( உள்ளாட்சி அமைப்புகள்) ஆகியவை அடங்கிய கூட்டுக் குழுக்களை உருவாக்குவது எனவும் 2 மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 ன் படி கல்வி நிறுவனங்கள் அருகில் தொடர் சோதனைகள் நடத்தி நடவடிக்கை எடுப்பதற்காக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இதர காவலர்கள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது . இதேபோன்று 3. காவல்துறையினரும் cotpa 2003 சட்டம் மற்றும்juvenile justice care&protection of children 2015 சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு விவரங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை மற்றும் 4 காவல்துறை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறை மற்றும் சுகாதாரத் துறையின் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஒவ்வொரு வாரமும் ஆய்வுக்கூட்டம் நடத்தி கண்காணிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை கொண்ட 391 சிறப்பு குழு க்கள் அமைக்கப்பட்டன. மேலும் கல்வி நிறுவனங்கள் அருகிலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் தயாரிக்கும் மற்றும் விநியோகம் சட்டத்தின்படி 2003 பிரிவின்படி6 மற்றும் 24(1)ன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை இயக்குனர் மற்றும் காவல் படை தலைவர் சங்கர் ஜிவால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைவர் முனைவர் அமல்ராஜ் இணைந்து நடவடிக்கை எடுக்க கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்கள். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக 19.11.2023 முதல் 14.9.2024 வரை காவல்துறை சார்பில் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 208.85 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 21761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் இவ்வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் ரூபாய்17.02 கோடி அபராதம் விதி த்தவுடன் மேற் குறிப்பிட்ட வழக்குகளின் சம்பந்தப்பட்ட 10155 வளாகங்கள் கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.குறிப்பாககாவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தவிர
132891 டன் தடை செய்யப்பட்ட புயலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 9924 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. காவல்துறையின் தொடர் நடவடிக்கை காரணமாக கடந்த மாதம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி பகுதியில் ஒரு வழக்கில் 10 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரை கைது செய்தனர். இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வருவதற்கு கர்நாடகம் தமிழ்நாடு மார்க்கமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் சமீபத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்டு அங்கு நடவடிக்கையின் காரணமாக கீழ்காணும் பெரிய வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.1.10.8.2024 அன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ 4 லட்சத்து 87 ஆயிரத்து 570 மதிப்புள்ள 490 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கூல் லீப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.2.20.8.2024 அன்று கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே ரூபாய் 3 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள 273 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் 1 குற்றவாளியை கைது செய்தனர் .3. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் 2.9.2024 அன்று ரூ 3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.4.3.9.2024 அன்று சேலம் மாவட்டம் தீவட்டி பட்டியில் ஒரு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ 6 லட்சத்து 5ஆயிரத்து 760 மதி புள்ள 698 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.5.10.9.2024 அன்று சேலம் மாவட்டம் கொளத்தூரில் ரூ 2 லட்சத்து 81ஆயிரத்து585 மதிப்புள்ள 406 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு 4 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது9498110581 எங்க வாட்ஸ் அப் எ ண் மூலமாகவோ அல்லதுspnibcid @gmail. Com வாயிலாகவோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறுவர்களுக்கும் கல்வி நிலையங்கள் அருகில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது ஒருபோதும் ஏற்கத்தக்கது அல்ல. இது குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு தகவல் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அத்தகவல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.