உதகை தொழில் நிறுவனங்கள் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.3.65 கோடி மதிப்பில் கடனுதவி – சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார்..!

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலை வளாகத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் முகாமினை தொடங்கி வைத்து, 47 பயனாளிகளுக்கு
ரூ.3.65 கோடி மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு  முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விருப்பமானது எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்என்றார், அதுமட்டுமல்லாமல் அவ்வாறு அறிவிக்கின்ற நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சென்று சேர்க்கப்படுகிறதா என்பதனை கண்காணித்து வருகிறார்கள். மேலும், ஏழை எளிய நடுத்தர உள்ளிட்ட அனைத்து தரப்பு
மக்களுக்கும் அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்ற நோக்கில் நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், இலவச வேட்டி – சேலையும் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணித்தில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடுகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் சுமார் 150 வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு பழங்குடியினர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து
செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காகவே இத்துறைக்கு அதிக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏறக்குறைய 53 சதவீத மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். அவ்வாறு படித்து, முடித்து வேலைநாடுவோர்களுக்காக பல்வேறு அரசு மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைநாடுவோர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுய தொழில் செய்து தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு ரூ.438.63 கோடி கடன் வங்கிகள் மூலம் தொழில்
நிறுவனங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் திட்டத்தின்கீழ் ரூ.1 கோடி வரையிலான திட்ட மதிப்பீட்டிற்கு 35 சதவீத மானியமாக (அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம்) வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில், தேயிலை தூள் தயாரித்தல், போக்கரி பொருட்கள் தயாரித்தல், அறைகலன்கன் தயாரித்தல், தையல் இயந்திரங்கள் வாங்குதல், மளிகை கடை, காய்கறி கடை,
பேன்சி மற்றும் ஸ்டேசனரி கடைகள், துணிக்கடை, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்பனை, இயற்கை உரக்கடைகள் உள்ளிட்ட தொழில்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சுய தொழில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெறும் இந்த தொழில் முனைவோர்களுக்கான கடன் வழிகாட்டுதல் முகாமில் 47 பயனாளிகளுக்கு ரூ.3.65 கோடி கடன் வசதிகள் மற்றும் மானியத்தொகை வழங்கி, தொழில் துவங்க ஊக்குவிக்கப்படுகின்றனர். மாவட்ட தொழில் மையம் மூலமாக பல்வேறு சுய உதவிக்கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டங்களின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் வசதி பெறப்பட்டு, தொழில் துவங்க ஆவண செய்யப்படுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வியாபார பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.15 இலட்சம் வரையில் துவங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை) கூடிய கடன்கள் வங்கி மூலம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, தொழில் முனைவோர்கள் இந்த கடனுதவிகளை முகாம்களை பயன்படுத்திக் கொண்டு தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தி பயன்பெற வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர்  தெரிவித்ததார். இந்நிகழ்வில் பொது மேலாளர்கள் (மாவட்ட முன்னோடி வங்கி) சதானந்த்,
திலகவதி (மாவட்ட தொழில் மையம்), வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர்,வசந்த், உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம் (தொழில்கள்)) சஜித், திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஜார்ஜ், மற்றும் அரசு அலுவலர்கள், சிறு குறு தொழிலாளர்கள் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்து சென்றனர்.