கோவையில் யானை தந்தங்கள் விற்க முயன்ற கும்பல் – மடக்கி பிடித்த வனத்துறையினர்..!

கோவை, கவுண்டம் பாளையம் விரிவாக்க பகுதியில் உள்ள தனியார் குடோனில் யானை தந்தங்களை பதுக்கி வைத்து ஒரு கும்பல் விற்க முயற்சி நடப்பதாக வனத்துறையின், தமிழ்நாடு வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு ஆணையம் ( WCCB) குழுவிற்கும், வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது . அதன் படி,தடாகம் காப்புக்காடு தெற்கு பகுதியிலுள்ள தனியார் குடோனில் சந்தேகபடும்படி ஆட்கள் வந்து செல்லுவதை நோட்டமிட்ட வனக்காவலர்கள், மெதுவாக குடோனுக்குள் சென்றனர், அங்கே குடோன் உட்புறத்தில் பெண் உட்பட ஐந்து நபர்கள் யானை தந்தங்களை பையில் வைத்து விற்க பேரம் பேசியதை கண்டனர். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்களை, வனத்துறை அலுவலர்,வனக்காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் கவுண்டம்பாளையம் சுமதி (வ55), நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆஸாத் அலி(வ45),சங்கனூர் நஞ்சப்பன் (வ47), வெள்ளமடை சந்தோஷ் பாபு (42), பாப்பநாயக்கன் பாளையம் கோவிந்தராஜுலு(வ65), என தெரியவந்தது ஐந்து பேரையும் கைது செய்து, டிராவல் பேக்கில் இருந்த இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்து குடோனின் உள்பகுதியில் வேறு என்ன உள்ளது என அலசி பார்த்த வனக்காவலர்கள், எப்படி யானை தந்தங்கள் கிடைத்தது விசாரிக்கையில் யானை தந்தங்கள் வெங்கடபுரம்,
செந்தில் வேலன் (62) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்த வனத்துறையினர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற 1ல் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். குற்றம் சுமத்தபட்ட பெண் உட்பட ஆறு பேரையும் அக் 10ம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வனத்துறையினர், யானை தந்தங்களை பதுக்கி வைத்து விற்க முயன்றவர்களை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.இதனை அறிந்த அப்பகுதியினர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்..