ஒடும் ரயிலில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட பலே திருடன் – மடக்கி பிடித்த ரயில்வே தனிப்படை போலீசார்..!

கோவை ரயில்வே போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் உத்தரவு பேரில் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சிறப்பு ரயில்வே போலீசார் நியமிக்க பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர், இந்த நிலையில் கடந்த ஆக 18 ம் தேதி இரவு காரைக்கல் விரைவு வண்டியில் பயணித்த மயிலாடுதுறை சேர்ந்த உமா ஈஸ்வரி (வ29) தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்திலிருந்து திருவாரூருக்கு செல்லுகையில், அதிகாலை தொட்டிப்பாளையம் இரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர், பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு ஒடும் ரயிலில் குதித்து தப்பி சென்றான். இதே போன்று கடந்த செப் 13ம் தேதி தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சேர்ந்த ரூபினி (வ25) கோயமுத்துார் விரைவு ரயிலில் திருப்பூருக்கு செல்லுகையில் ஈரோடு இரயில் நிலையத்தை தாண்டி மெதுவாக ரயில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர் பெண் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து ஒடும் ரயிலில் குதித்து ஓடியுள்ளான். இரு வேறு நகை திருட்டு சம்மந்தமாக ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வநதனர்.

ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் V. வனிதா உத்தரவுப்படி,காவல்துறை துணை தலைவர் அபிஷேக் தீக்ஷித், காவல் கண்காணிப்பாளர் I. ஈஸ்வரன், கண்காணிப்பில், கோவை காவல் துணை கண்காணிப்பாளர் பாபு தலைமையில், காவல் ஆய்வாளர் ஈரோடு, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை ரயில் திருடர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் சந்தேகபடும்படி ரயில் நிலையத்தில் நின்ற ஈரோடு பெருந்துறை சேர்ந்த கார்த்திக் ராகேஷ் என்ற நபரை பிடித்து விசாரித்ததில் ஓடும் ரயிலில் திருடும் நபர் என தெரிய வந்தது. மேலும் விசாரணைக்கையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில்வே காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகள் உள்ளன. பதுக்கி இருந்த, 13 சவரன் தங்க நகை மீட்கப்பட்டு, குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர் . துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை ரயில்வே போலீசார்களை அதிகாரிகள் பாராட்டினார்கள்..