கோவை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் உதயகுமார் (வயது 30). இவர் நேற்று கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது .இதனால் போலீஸ்காரர் உதயகுமாரை அந்த ஆசாமி தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, தாக்கி, கீழே பிடித்து தள்ளினார். இது குறித்து உதயகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தகராறு செய்த ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அவர் வடவள்ளி கோகுலம் காலனியை சேர்ந்த தங்கராஜ் ( வயது 38 ) என்பது தெரிய வந்தது. இவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், தாக்குதல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply