ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ரோட்டில் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து கடைகள் முன் பொருட்கள் வைத்து செட்டுகள் அமைத்து இருப்பதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி குமார், உதவி நகரமைப்பு அதிகாரி கோவிந்த பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. பொக்லேன் எந்திரம் மூலம் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் 20 ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது ஒரு பகுதியின் ஆக்கிரம்பு அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 120 கடைகளின் ஆக்கிரமிப்புளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். இதன் மூலம் இந்த சாலையின் ஒவ்வொரு புறமும் 5 அடி வரை கிடைப்பதுடன், மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று தெரிவித்தனர். இதேபோல நகரில் மற்றும் சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி போக்குவரத்துக்குக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.