போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு..!

ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் வேல் டெக் கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் தலைமையில் வீராபுரம் வேல் டெக் ஹைடெக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் அவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்துவது குறித்தும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்துவது குறித்தும் அறிவுரைகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறி போதைப் பொருட்களை பொருட்கள் மற்றும் பயன்பாட்டை ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்து கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் காவல் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் . இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவடி காவல் துணை ஆணையாளர் ஐமன் ஜமால் ஆவடி சரகம் மக்கள் தொடர்பு அலுவலக காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக காவல் ஆய்வாளர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் 1000 கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்..