ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… திருச்சி டூ சென்னை… ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.!!

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை – தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரயிலானது (06186) 8 ஆம் தேதி இயக்கப்பட்டு, மறுமாா்க்கமாக தூத்துக்குடி – சென்னை இடையிலான சிறப்பு ரயிலானது (06187) வரும் 9 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து 21 பெட்டிகளுடன் இரவு 12.25 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு காலை 7.50 க்குச் சென்றடையும். ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட விழாக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருச்சி – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது. மறுமாா்க்கமாக தாம்பரம் – திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது.
திருச்சியிலிருந்து மாலை 5.35 மணிக்கு 20 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திண்டிவனம் மேல்மருவத்தூா் செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் விடும் செய்தி பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்..