கோவையில் மேலும் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!

கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது . கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி கூடத்துக்கு ‘கடந்த வாரம் இமெயில் “மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த நிலையில் மீண்டும் இன்று காலையில் கோவை பீளமேட்டில் உள்ள கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மற்றும் அவிலா கான்வென்ட் விமல் ஜோதி மேல்நிலைப்பள்ளி, ஓணாப் பாளையம் பப்ளிக் ஸ்கூல் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலும் “இமெயில் ” மூலமாகத்தான் வந்துள்ளது..பள்ளிக்கூடம் முழுவதும் போலீஸ் துப்பறியும் நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.இதனால் மாணவர்கள் கடும் பீதி அடைந்தனர்.இதையறிந்த பெற்றோர்கள்பள்ளிக்கு வந்து மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..