காதலியை லாட்ஜ்க்கு அழைத்துச் சென்று பலாத்காரம் – ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த காதலன் மீது இளம்பெண் புகார்..!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் கபர்கான். அவரது மகள் பர்வேஷ் அப்ரின் (வயது 25) இவர் 2017 ஆம் ஆண்டு முகமது யாசர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .2023 ஆம் ஆண்டு இவரது கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது.இதனால் பர்வேஷ் அப்ரின் குடும்பத்துடன் போத்தனூரில் குடியேறினார்கள். இவருக்கும் அவருடன் பள்ளியில் படித்த பாசித் அகமது ( வயது 31) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது. இவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் 4- 9 -2024 அன்று பாசித் அகமது போத்தனூரில் உள்ள பர்வேஸ் அப்ரின் வீட்டுக்கு வந்தார்.இந்த நிலையில் பர்வேஷ் அப்ரினையும், குழந்தைகளையும் காந்திபுரத்துக்கு ஷாப்பிங் அழைத்துச் செல்வதாக அவரது கணவரிடம் அனுமதி கேட்டார். பின்னர் காந்திபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து குடிக்க செய்தார். பின்னர் அவரிடம் உடலுறவு செய்து அதை வீடியோ எடுத்துக் கொண்டார் .இந்த நிலையில் அந்த வீடியோவை காட்டி பர்வேஷ் அப்ரினை மிரட்டி வந்தாராம். இது குறித்து மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் காதலன்பாசித் அகமது (வயது 31) மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.