கேரளா வியாபாரியிடம் இரிடியம் வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி- கோவை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.!!

கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள காரகுருஜியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 55) தொழிலதிபர். இவருக்கு கேரள மாநிலம் மன்னார் காட்டில் சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன . இந்த நிலையில் கோவை சேர்ந்த அபூபக்கர் என்பவர் அப்துல் அஜீஸ் வீட்டுக்கு சென்றார் . அங்கு தன்னை ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக அறிமுகம் செய்து கொண்டார் . பின்னர் கோவையில் ஏராளமான நிலங்கள் விற்பனைக்கு உள்ளது . அதை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார். இதை நம்பிய அப்துல் அஜீஸ் கோவைக்கு வந்தார். அப்போது அபூபக்கர் தனது நண்பர்களை அப்துல் அஜீசிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் ஜான் பீட்டர் என்பவர் விலைமதிக்க முடியாத இருடியம் உள்ளது. இதன் விலை ரூ2 கோடி. இதை வெளியே விற்பனை செய்தால் ரூ 10 கோடி வரை கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பிய அப்துல் அஜீஸ் அவர்களிடம் ரூ 2கோடி கொடுத்தார்.அவர் கூறியபடி இருடிய
ம் கொடுக்கவில்லை. ரூ 2 கோடி பணத்தை மோசடி செய்துவிட்டனர் .இது குறித்து அப்துல் அஜீஸ் ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்தார், போலீசார் அபுபக்கர் ,ஜான் பீட்டர், செந்தில்ராஜ், ஜனகன் ,ஜோதிராஜ், அனில் குமார் உட்பட சிலரை தேடி வருகிறார்கள்..