அப்துல் கலாமின் 93 வது பிறந்தநாள் விழா… கொட்டும் மழையிலும் 2000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய நடிகை நமீதா..!

சென்னை: உலகம் போற்றும் உத்தமத் தலைவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி தலைசிறந்த விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்தநாள் விழா மற்றும் சமூக சேவைகள் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே. புகழேந்தி அவர்களின்56 வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கே. கே. சாலை எம்ஜிஆர் நகர் அண்ணா சிலை அருகில் டாக்டர் எச்.வி ஹண்டே தலைமையில் நடந்தது. எம் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.கரு. நாகராஜன் கராத்தே. தியாகராஜன் டால்பின் ஸ்ரீதர் வி. காளிதாஸ் கே. பிரேம் ஆனந்த் என் எஸ். பிரேம்நாத் லலிதாம்பிகா மோகன் அலங்கார முத்து சிவமணிகண்டன் சுதிர் செந்தூர் மணி நமச்சிவாயம் ஆர். ஹரிஹரன் பி. பார்த்திபன் என்கிற பரணி சத்யா நகர் இ புஷ்பராஜ் ஏ. சதாசிவம் லட்சுமி பரமேஷ் இ. காளியம்மாள் பி. கோகிலா ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி ஆள் உயர மாலை அணிவித்து விழாவில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கி அசத்தினர். விழாவில் திரைப்பட நடிகை நமீதா கொட்டும் மழை என்றும் பாராமல் 2000 சுவையான சிக்கன் பிரியாணி வழங்கினார். மேலும் இவ்விழாவில் ஸ்ரீ கார்த்திக் பி.சுரேஷ் ஆர். கார்த்திகேயன் பவர் எம். மணிகண்டன் ஜே. மோகன் எஸ். முருகேசன்மாரிமுத்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மூத்த வழக்கறிஞர் கே. புகழேந்தி மக்கள் போற்றும் படியாக சிறப்பாக செய்திருந்தார்.