தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாஎ கொடுக்கும் வகையில் அக்டோபர் 28 முதல் 30 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவு துறை இந்த இரண்டு துறைகளின் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் வருகிறது.
இதில் கிடைக்கும் வருவாய் கொண்டே பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 120 கோடியும் மாதத்திற்கு 3,698 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை செய்கிறது.
கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானது தமிழகம் முழுதும் நடைபெற்றது. இதனை ஓவர் டேக் செய்யும் வகையில் 2023- 2024ஆம் ஆண்டில் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் 8 நாட்கள் விடுமுறையானது விடப்படுகிறது. குறிப்பாக திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. மேலும் முக்கிய கோயில் விழாக்கள் நேரத்திலும் மதுக்கடைகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்படுகிறது.
அந்த வகையில் வருகிற அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும். இந்த விழாவையொட்டி 144 தடை உத்தரவுக்களும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். முத்துராம லிங்க தேவிரின் குருபூஜையையொட்டி முளைப்பாரி எடுத்தும் பாலபிஷேகம் செய்தும் மக்கள் வழிபடுவார்கள்.
மேலும் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்கு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். இதன் காரணமாக எந்த வித சட்டம் ஒழுங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் . அந்த வகையில் ராமநாதபுரத்தில் வருகிற அக்டோபர் 28, 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட கடந்தாண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அனைத்து மதுக்கடைகளை மூடவும், மனமகிழ் மன்றங்கள், பார்கள் உள்ளிட்டவைகள் இயங்காது எனவும் மாவட்ட ஆட்சியர் கடந்தாட்னு அறிவித்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி அரசு மதுக்கடைகளை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். மேலும் சிவகங்கை மாவட்டத்திலும் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே இந்தாண்டும் வருகிற 28 முதல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகவுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் குடிமகன்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் 3 நாட்கள் தொடர் டாஸ்மாக் விடுமுறையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..