சர்ச்சையில் சிக்கிய காவி நிறத்தில் மாறிய BSNL லோகோ… “இந்தியாவுக்கு பதில் பாரத்… வலுக்கும் கண்டனம்..!

நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் லோகோவை மாற்றியுள்ளனர்.

இதனுடன் 7 புதிய சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், லோகோவில் கனெக்டிங் இந்தியா, கனெக்டிங் பாரத் போன்ற வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்பேம் இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட் போன்றவைகள் மூலம் எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது. இது போக பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிஎஸ்என்எல் லோகோ முற்றிலும் காவிநிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது.

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அடையாள சின்னத்தை காவி நிறத்திற்கு மாற்றியது ஏன்.? அரசியல் களத்தில் தடுமாறுவதால் நிறத்தில் அரசியல் செய்கிறீர்களா. அதோடு கனெக்டிங் இந்தியா என்பதற்கு பதிலாக கனெக்டிங் பாரத் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி எழுச்சி பெறுவதால் இந்தியா என்ற வார்த்தை உங்களுக்கு கசக்கிறதா என்று பாஜக கட்சியினை கடுமையாக அவர் விமர்சித்துள்ளார். மேலும் ஏற்கனவே பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும்நிலையில் தற்போது பிஎஸ்என்எல் லோகோ காவிநிரத்திற்கு மாற்றப்பட்டது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை வந்தே பாரத் ரயிலில் காவி, டிடி தொலைக்காட்சியில் காவி போன்றவைகள் இருக்கும் நிலையில் தற்போது பிஎஸ்என்எல் லோகோவையும் காவிக்கு மாற்றியுள்ளனர். மேலும் பாஜகவின் கொடியில் காவி சின்னம் இருப்பதால் அதையே அவர்கள் எங்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி அடிப்பதை உடனடியாக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.