கோவை கோட்டைமேடு , நாஸ் தியேட்டர் ரோட்டை சேர்ந்தவர் சோம்நாத் . இவரது மனைவி வசந்தா ( வயது 66) சம்பவத்தன்று இவர் வீட்டின் ஷட்டரை பூட்டாமல் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள், கேமரா, பணம் ரூ. 2000 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து வசந்தா உக்கடம் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
திறந்து கிடந்த வீட்டில் புகுந்து 19 பவுன் நகை, பணம் திருட்டு – பட்டப்பகலில் துணிகரம்..!
