2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..!

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40 ) இவர் கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெகமம் பக்கமுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டில் செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தார். வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்து 7 பவுன் தங்க நகைகளையும், ரூ 130 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ஆனந்தகுமார் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதே போல சவுரிபாளையம் ,ஸ்ரீ லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்த ராம் (வயது 40) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 – ந் தேதிகுடும்பத்துடன் பெங்களூரில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு தீபாவளி பண்டிகை சென்று விட்டனர் நேற்று அவரது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வேலைக்கார பெண் பவானி தகவல் கொடுத்தார். வந்து பார்த்தபோது முன் கதவு பின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆனந்தம் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.