கடன் வாங்கி தருவதாக கோவை டாக்டரிடம் ரூ.70 லட்சம் நூதன மோசடி.!!

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள திரு. வி.க நகர், 4வது வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் கிஷோர் குமார். ( வயது 45)இவர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு சென்னை ,கோவை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் டாக்டர் கிஷோர் குமாரை கோவையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அணுகினார். அவரிடம் 1 ரூபாய் வட்டியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வாரத்தை காட்டினார் .இதை நம்பிய டாக்டர் தனக்கு 1ரூபாய் வட்டிக்கு ரூ15 கோடி வேண்டும் என்று கேட்டார்.. சக்திவேல் இதற்கு கமிஷனாக ரூ. 69 லட்சத்து 75 ஆயிரம் தர வேண்டு என்றார்.இந்த பணத்தை முன்கூட்டி கொடுத்தால் தான் கடன் வாங்கி கொடுக்க முடியும் என்றும் கூறினாராம் . இதை நம்பிய டாக்டர் கிஷோர் குமார் அவரிடம் ரூ. 69 லட்சத்து 75 ஆயிரம்  கொடுத்தார். ஆனால் சக்திவேல் கடன் வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து டாக்டர் கிஷோர் குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சக்திவேல் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.