கோவை சி.எஸ்.ஐ .பிஷப்பிடம் போலீஸ் துணை கமிஷனர் நேரில் விசாரணை.!!

கோவை சி.எஸ்.ஐ.யில் பணியாற்றி வந்த போதகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு சரியான ஊதியம் வழங்கபடவில்லை என்பது உட்பட பல்வேறு புகாரை அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார் . இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக பிஷப் திமோத்தி ரவீந்தருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து பிஷப் திமோத்தி ரவீந்தர் நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் துணை கமிஷனர் ஸ்டாலின் விசாரணை நடத்தினார். புகார் செய்த அந்த போதகரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர்..