சென்னை : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை மளமளவென சரிவை சந்தித்த நிலையில், மீண்டும் விலை உயர்ந்து வருகிறது.
அதிபர் தேர்தலுக்கு முன்பு 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தங்கம் படிப்படியாக குறைந்து 55 ஆயிரத்தை நெருங்கி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 3 நாட்களாக தொடர் விலை உயர்வு காரணமாக மீண்டும் ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.7,115-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,920-க்கும் 10 கிராம் ரூ.71,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.76 உயர்ந்த நிலையில் இன்று ரூ.55 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.7,762-க்கும் அதேபோல் ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் (8 கிராம்) ரூ.62,096க்கும், 10 கிராம் 77,620-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்ததைத் தொடர்ந்து ஒரு கிராம் ரூ.5,870-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.46,960 க்கும், 10 கிராம் ரூ.58,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்த நிலையில் இன்று விலை மாற்றமின்றி அதே விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.101 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 10 கிராம் வெள்ளி 1.010க்கும், அதேபோல் 100 கிராம் வெள்ளி ரூ.9,900 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கத்தி முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கின்றனர். மேலும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தின் தேவைக்காக வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த விலை உயர்வு நடுத்தர குடுபத்தினரை பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது..