கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கி பாளையம் பக்கம் உள்ள சுப்பையா நகரில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக வடக்கிபாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர்பொன்ராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து விளையாடியதாக கொங்க நாட்டம் புதூரை சேர்ந்த விவேக் (வயது 33) வடக்கிபாளையம் மோகன் குமார் (வயது 20 )குள்ளி செட்டிபாளையம் வடிவேல் (வயது 28) அரவிந்த் ( வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 12 ,600 பறி முதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சீட்டாட்டம் – 4 பேர் கைது..!
