கோவை கிணத்துகடவு பக்கம் உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மகன் விமல் குமார் (வயது 27) என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கப்பளாங்கறையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் , ஒரு லேப்-டாப் ஆகியவற்றை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து விமல் குமார் நெகமம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.