கோவை கணபதி அருகே உள்ள மணிய காரம்பாளையம், அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் ( வயது 40 ) இவர் கடந்த 29ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சேலத்துக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், ரூ 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து சக்திவேல் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு ..!
