கோபிசெட்டிபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம்..!

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, தனியார் தூய்மை பணியாளர்கள் மற்றும் முக்கிய தூய்மை பணியாளர்கள் 283 பேருக்கும் பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் இந்திய மருத்துவ சங்கமும் அபி S.K. பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து 07 .12 .2024 சனிக்கிழமை காலை 7.00 மணி துவங்கி அபி S.K. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது முகாமில் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, இசிஜி, கண் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் உரிய சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்கள் 08.12.2024 இந்திய மருத்துவ சங்கத்தின் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இருதயம், எலும்பு, நுரையீரல், பெண்கள் மருத்துவம், மன நலம், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்வியல் முறை குறித்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர் இளங்கோ கலந்து கொண்டார் மேலும் நகரமன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்களும் நகராட்சி ஆணையாளர் திருமதி சுபாஷினி அவர்களும் அபி எஸ் கே மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் குமரேசன் அவர்களாலும் இன்று காலை துவங்கப்பட்டு மதியம் 3 மணி வரை இந்த முகாம் மில் பங்கு பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது