கடையில் பால் பாக்கெட் வாங்குவது போல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை அருகே உள்ள சின்ன வேடப்பட்டி ,சக்தி நகரை சேர்ந்தவர் ஆ மெல்.இவரது மனைவி ஜெயராணி ( வயது 68 ) மளிகை கடை நடத்தி வருகிறார்கள் .நேற்று காலை 6 மணிக்கு இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கால் லிட்டர் பால் பாக்கெட் வேண்டும் என்று கேட்டார் . அவர் குளிர்சாதன பெட்டியை திறந்து பால் பாக்கெட் எடுக்கும் போது திடீரென்று அந்த ஆசாமி ஜெயராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார்.. இதுகுறித்து ஜெயராணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்..