கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில்நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென்று அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் அடியில் பாய்ந்தார். பின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமார் ( வயது 27) என்பது தெரிய வந்தது.இவர் கோவையில் கட்டிட வேலை செய்து வந்தார்.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..