கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள மீனா எஸ்டேட் 2-வது வீதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி அனிதா ( வயது 44) இவரது மகன் அவரது வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை சிறிது நேரத்தில் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து அனிதா பீளமேடு போலீசில் புகார் . போலீசார் வழக்கு பதிவு செய்து சவுரிபாளையம் கிருஷ்ணா காலனி எம்ஜிஆர் நகரை சேர்ந்த 13 வயது சிறுவன், சவுரிபாளையம் சாமியார் வீதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், புலியகுளம் மீனா எஸ்டேட் கே .கே . சாமி காலனியை சேர்ந்த 13 வயது சிறுவன்,சவுரிபாளையம் எல்லைத் தோட்டம், இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்..
சைக்கிள் திருட்டு – சிறார்கள் 4 பேர் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைப்பு..!
