கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சதாம் உசேன் .நேற்று இவர் கோவை புதூர் பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே திறந்த வெளியில் இருந்து 4பேர் மது அருந்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் சதாம் உசேன் அங்கு விரைந்து சென்றார். பொது இடத்தில் இப்படி மது அருந்தக்கூடாது என்று கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் சதாம் உசேனை தகாத வார்த்தைகளால் திட்டி, காலால் மிதித்து கீழே தள்ளினார்கள் .இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை புதூர் மீனாட்சி நகரை சேர்ந்த கர்ணன் ( வயது 19 )பேரூர் எம். ஆர் .கார்டன், காந்திநகர் ராகேஷ் ( வயது 26 )கோவை புதூர், மீனாட்சி நகர் தர்ஷன் (வயது 23) சுண்டக்காமுத்தூர் வெங்கடேசன் ( வயது26) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாத தடுத்தல், தாக்குதல்,கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
பொது இடத்தில் மது அருந்துவதை தட்டி கேட்ட போலீசுக்கு அடி உதை – 4 பேர் கைது..!
