கோவையில் டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா நேற்று இரவு அந்த ஓட்டலில் 2 -வது மாடியில் உள்ள ஒரு அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மதுரை மேலூரை சேர்ந்த அஜித்குமார் ( வயது 24) பல்லடம் கொத்து முட்டி பாளையத்தைச் சேர்ந்த அஞ்சலி ( வயது 22 )மேற்கு வங்காளம் அந்தாரா ஷேக் (வயது 23) ஊட்டி நசீர் (வயது33) கேரள மாநிலம் இடுக்கி மணிகண்டன் ( வயது 30) துடியலூர் ஹரி கிருஷ்ணா (வயது 26) நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜா (வயது 46 )கொல்கத்தா சபுதின்முல்லா (வயது 27) ,ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.குமரப்பன் தலைமறைவாகி விட்டார். இவரை தேடி வருகிறார்கள். 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..