கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மதுமது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை , ,ஆர். எஸ். நகரை சேர்ந்த பெனிடோ (வயது 21) கைது செய்யப்பட்டார். 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல செட்டி வீதியில் உள்ள, டாஸ்மாக் கடைஅருகே திடீர் சோதனை நடத்தினார்கள்.. அப்போது அங்கு மதுபாட்டில் பதுக்கி வைத்துஅதிக விலைக்கு விற்றதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ( வயது 50 )கைது செய்யப்பட்டார் .26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டாஸ்மாக் கடைகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் திடீர் சோதனை- 2 பேர் கைது
