கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதி சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி கிரேஸ் மேரி ( வயது 29) இவர் திருநெல்வேலி செல்வதற்காக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஒண்டிப்புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார் .இது குறித்து கிரேஸ் மேரி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு..!
