ஓடும் பஸ்சில் வக்கீலிடம் செல்போன் திருடியவர் கைது..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, சர்ச் ரோட்டை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 75) ஊட்டியில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவை காந்திபுரத்திலிருந்து பெரிய கடை வீதிக்கு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கிய போது அவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை.யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர். இது குறித்து ஹரிகரன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவன் தான் அந்த செல்போனை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவன் கோவை, புலியகுளம் மணிகண்டன் (வயது 47 )என்பது தெரிய வந்தது . அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது..