கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே குட்கா விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக ராஜகோபால் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சரஸ்வதி ( வயது 36) என்பவரை நேற்று மாலை கைது செய்தனர். இவரிடமிருந்து 83 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..