காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரில் மளிகை கடை நடத்தி வந்தவர் கே.நடராஜ் (வயது 65) இவர் இன்று காலை 5 – 45 மணிக்கு அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். – அப்போது அந்த வழியாக வந்த காட்டுயானை திடீரென்று இவரை வழிமறித்து தந்தத்தால் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்து படுகாயம் அடைந்த நடராஜ் அதே இடத்தில் இறந்தார்,இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை துரத்தினார்கள். துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள் .அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’.காட்டு யானை தாக்கி பலியான நடராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஆலடியூரை சேர்ந்தவர். இவர் தமிழக வியாபாரிகள் சம்மேளன வடமதுரை கிளை துணை தலைவராக உள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை மற்றும் கிளை நிர்வாகிகள், வியாபாரிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.காட்டு யானை தாக்கி பலியான வியாபாரி நடராஜ் குடும்பத்துக்கு அரசு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் முதலமைச்சருக்கும், வனத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது..