கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55) இவர் போக்கியத்துக்குவீடு தேடிக் கொண்டிருந்தார் . ” ஓஎல்எக்ஸ் ” ஆப் மூலம் ஜெகத்சிங் என்ற ராஜசேகர் அவரிடம் தொடர்பு கொண்டார். வடவள்ளியில் போக்கியத்துக்கு வீடு இருப்பதாகவும்,ரூ 12 லட்சம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.அதை நம்பிய செல்வராஜ்,ராஜசேகரிடம் நேரடியாகவும் வங்கி மூலமாகவும் ரூ 12 லட்சம் அனுப்பி வைத்தார்.பிறகு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவிதா என்பவர் செல்வராஜிடம் அந்த வீடுதனது வீடு என்றும் ராஜசேகர் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருப்பதாக கூறினார்.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராஜ்இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெகத்சிங் என்ற ராஜசேகர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
குத்தகைக்கு வீடு வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி..!
