கோவை அருகே உள்ள பூலுப்பட்டி,பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதுஇளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அதே நிறுவனத்தில் காந்திபுரம், லட்சுமணன் வீதியில் வசிக்கும் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்வரன் ( வயது 27 )என்பவரும் வேலை பார்த்து வந்தார் .கடந்து 20 23 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் ஆசை காட்டி விக்னேஸ்வரன் காதலியிடம் பலமுறை உடலுறவு கொண்டிருந்தாராம். இந்த நிலையில் விக்னேஸ்வரனுக்கு அவரது பெற்றோர்கள் வேறு இடத்தில் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர் . இது காதலிக்கு தெரிய வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு காதலியை திருமணம் செய்ய மறுத்தார். இந்த நிலையில் வெங்கடேஸ்வரன் காதலியின் படங்களை சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து அவரது காதலி கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
திருமண ஆசை காட்டி காதலி பலாத்காரம்- காதலனுக்கு போலீசார் வலைவீச்சு.!!
