கோவை சவுரிபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40) சாப்ட்வேர் இன்ஜினியர் .இவர் தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு கடந்த 26- ஆம் தேதி வெளியூர் சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவில் அவரது காரில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சதீஷ் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
நள்ளிரவில் கோவை இன்ஜினியர் கார் எரிந்து நாசம்..!
