தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் அதிகரிப்பு..!

சென்னை; இந்திய அளவில் தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தமிழக அரசு தரிவித்துஉள்ளது. மேலும் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு பெருமிதம் தெரிவித்துள்ளது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) என்பது இந்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு பொருளாதாரம் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும். தற்போது, ​​EAC-PM இன் அமைப்பின் தலைவராக ஸ்ரீ சுமன் பெர்ரி இருந்து வருகிறார். அவருடன் பொருளாதார குழு உறுப்பினர்களாக, ஸ்ரீ சஞ்சீவ் சன்யால், டாக்டர் ஷமிகா ரவி, ஸ்ரீ ராகேஷ் மோகன் (பகுதிநேர உறுப்பினர்), டாக்டர் சஜ்ஜித் சினாய் (பகுதிநேர உறுப்பினர்), டாக்டர் நீலேஷ் மிஸ்ரா (பகுதிநேர உறுப்பினர்), ஸ்ரீ நிலேஷ் ஷா (பகுதிநேர உறுப்பினர்), பேராசிரியர் டி.டி. ராம் மோகன் (பகுதிநேர உறுப்பினர்) மற்றும் டாக்டர் பூனம் குப்தா (பகுதிநேர உறுப்பினர்) ஆகியோர் உள்ளனர்.

EAC-PM இன் பரிந்துரை விதிமுறைகளில், பிரதமரால் குறிப்பிடப்படும் எந்தவொரு பொருளாதார அல்லது வேறு பிரச்சினையையும் பகுப்பாய்வு செய்து அவருக்கு ஆலோசனை வழங்குதல், பெரிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் பிரதமரிடம் அது குறித்த கருத்துக்களை முன்வைத்தல் ஆகியவை அடங்கும். இவை தானாக முன்வந்து அல்லது பிரதமர் அல்லது வேறு யாருடைய பரிந்துரையின் பேரிலோ இருக்கலாம். அவ்வப்போது பிரதமர் விரும்பும் வேறு எந்தப் பணியையும் மேற்கொள்வதும் இதில் அடங்கும். இந்த நிலையில், இந்த குழு கடந்த நிதி ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், தமிழ்நாடு சாதித்தது என்பது போன்ற விவரங்களையும். பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி.) எடுத்துக்கொண்டால், இந்தியாவில் தமிழகத்தின் பங்கு 1960-61-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. அது 2023-2024-ம் ஆண்டில் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மக்களின் தனி நபர் வருவாயை பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டில் 171.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்கை கொண்டிருக்கின்றன. இதுவே தமிழகத்தில் உள்ள தொழில் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.