கோவை கடைவீதி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், செல்வபுரம் பகுதியில் நேற்று தீவிர கஞ்சா வேட்டை நடந்தது. அப்போது உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் அப்துல்லா (வயது 38) கைது செய்யப்பட்டார். சாய்பாபா காலனி ஜீவா நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்றதாக வேலாண்டிபாளையம் அருண் (வயது 20) கைது செய்யப்பட்டார்.
இதேபோல கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த மணி பாரத் ( வயது 19) ஜானகிராமன் (வயது 27 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். செல்வபுரம் ,செல்வ சிந்தாமணி குளம் ,பொதுக் கழிப்பிடம் அருகே கஞ்சா விற்றதாக மைல்கல் பிள்ளையார்புரம் முகமத் சுகாலி (வயது 21)கோவை புதூர் ஆகாஷ் ( வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.