கோவையை சேர்ந்தவர் பென்னி என்ற ஜெபராஜ் ( வயது 44) பெயிண்டர் .இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு 14 வயதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா பெயிண்டர் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார் . இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்தன. இதையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜெபராஜ்க்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதிப்பு தீர்ப்பளித்தார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை – பெயிண்டருக்கு 7 ஆண்டு சிறை..!
