வால்பாறை – அக்காமலை எஸ்டேட் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 வது ஆண்டு தைப்பூச திருவிழா..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 45 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .

அதைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்திலிருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன், ஸ்ரீ முனீஸ்வரன் ஆகிய கோவில்களில் பூஜைகள் செய்யப்பட்டு மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்றடைந்து அங்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. பின்பு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி தேவியர்களான ஸ்ரீ வள்ளிநாயகி, ஸ்ரீ தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த தைப்பூச விழா நிகழ்ச்சிகளை தைப்பூச விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..