கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா,போதை மாத்திரை, புகையிலை பொருட்கள் கடத்தல் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சாகடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார்அங்குள்ள செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் கிஷோர்(வயது 22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாபறிமுதல்செய்யப்பட்டது. விசாரணையில் இந்த கஞ்சாவை தேனி மாவட்டத்தில்இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கோவைக்கு கஞ்சா கடத்தல் – மதுரை வாலிபர் கைது..!
