கோவை கணியூர் சுங்கச்சாவடியில் கன்டெய்னர் லாரியில் திடீர் தீ..!

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் அந்த வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது .அந்த லாரியின் பின்பக்கம் உள்ள கன்டெய்னர் கதவிலிருந்து புகை வந்தது. அதை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் டிரைவரிடம் தெரிவித்தனர். உடனே டிரைவர் லாரியை ஒரமாக நிறுத்தி பார்த்தபோது கன்டெய்னரில் இருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கன்டெய்னரில் பிடித்த தீயை அணைத்தனர். அதிலிருந்த கோழியை சுத்தப்படுத்தும் எந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம்கள் எரிந்து நாசமானது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.