மகளை காதலித்த ஆத்திரத்தில்… வாலிபரை கத்தியால் குத்திய தந்தை..!

கோவை ரத்தினபுரி ,பாலுசாமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மகன் மணிகண்டன் ( வயது 29) இவர் கண்ணப்ப நகரை சேர்ந்த முத்து கருப்பையாவின் மகனை காதலித்து வந்தாராம். இதை முத்து கருப்பையா கண்டித்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த முத்து கருப்பையா, மணிகண்டனை கத்தியால் குத்தி தடியால் தாக்கினாராம் . அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து முத்து கருப்பையாவை கைது செய்தார்..