போலீசாருடன் தகராறு – பேருந்து ஓட்டுநர் கைது..!

கோவை பீளமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சென்ராயன். இவர் நேற்று பீளமேடு, சித்ரா சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த முடியும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த உடுமலையைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் (வயது 27) செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஒட்டி வந்தார் .இதை பார்த்த போலீஸ்காரர் சென்ராயன் பஸ்சை நிறுத்தி டிரைவரை கண்டித்தார் . இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் போலீஸ்காரர் சென்ராயனை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாது தடுத்தாராம். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது ..சப் இன்ஸ்பெக்டர் நஸ்
ரீன் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் காளிதாசை கைது செய்தார் .பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்..