கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் இன்று காலை வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்க் கொண்டார் முன்னதாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் வால்பாறையில் உள்ள 21 வார்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வர அறிவுறுத்தியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வால்பாறையிலுள்ள அம்மா உணவகம் சென்று காலை உணவை உட்கொண்டு இதே போன்று பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்றும் குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார் அதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மாணவர்களிடம் கேள்வி கேட்டு பதிலளித்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திருக்குறள் புத்தகத்தை வழங்க சிறந்த முறையில் கல்வி பயின்று கடந்த ஆண்டைவிட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் அதைத்தொடர்ந்து நெடுங்குன்று மலைகிராமத்திற்கு சென்று அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார் அதைத்தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிமுதல் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் இன்று பெற்றுவரும் மனுக்களை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமும் நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காண உள்ளார் இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சிதலைவரின் இந்த ஆய்வு பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் ஆய்வு – பொதுமக்கள் மகிழ்ச்சி..!
