கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாத்தா உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனியாக இருந்த பாட்டிக்கு துணையாக சிறுமி இரவு நேரத்தில் அங்கு தங்கி வந்தார். கடந்த 15ஆம் தேதி இரவு அந்த சிறுமியை திடீரென்று காணவில்லை .இது பற்றி பாட்டி சிறுமியின் தந்தைக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து காணாமல் போன சிறுமியை பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. மேலும் சிறுமியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர போலீசார் சிறுமி மாயம் என வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர் . ஆனால் அந்த சிறுமி மறு நாள் அதிகாலையில் வீட்டுக்கு வந்தார். அவரிடம் பெற்றோர் இரவு முழுவதும் எங்கு சென்றாய்? என்று கேட்டனர். அதற்கு அவர் தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறினார். இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் வீட்டுக்கு வந்துவிட்டதாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் அந்த சிறுமியிடம் இரவு நேரத்தில் எங்கு சென்றாய் ?என்று துருவி துருவி விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமிக்கு சினாப்சாட் (சமூக வலைதளம்) மூலம் கல்லூரியில் படித்த 2 மாணவர்கள் அறிமுகம் ஆகி உள்ளனர். அவர்கள் 2 பேரும் கடந்த 15 ஆம் தேதி இரவு சிறுமியை தங்களது அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்கள் மேலும் 5 பேர் இருந்துள்ளனர். அவர்கள் 7 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அறைக்குள் வைத்து விடிய விடிய 7 பேரும் பலாத்காரம் செய்து விட்டு காலையில் விடிந்ததும் சிறுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் அந்த சிறுமியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற 2 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கோவை புதூரில் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வரும் ஜெபின் ( வயது 20) ரக்சித் ( வயது 19)என்பது தெரிய வந்தது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூட்டு பலாத்காரம் செய்ததில் தொடர்புடைய அபினேஷ்வரன் ( வயது 20) தீபக் (வயது 20) யாதவராஜ் ( வயது 19)முத்து நாகராஜ் ( வயது 19)நித்திஷ் (வயது 20) 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். கூட்டு பாலியல் பலாத்கார புகாரின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த 7 மாணவர்களை கைது செய்தனர்.. மேலும் அந்த சிறுமியை அழைத்துச் செல்ல பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .நேற்று மாலை 7 பேரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- 17 வயது சிறுமிக்கு ஸ்னாப் ஷாட் (சமூக வலைதளம்)மூலம் கோவையில் கல்லூரியில் படித்து வரும் ஜெயின், ரக்சித் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் சிறுமியிடம் பழகி தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுடன் படிக்கும் சக மாணவர்கள் 5 பேர் இருந்துள்ளனர். பின்னர் மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலில் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக சிறுமியை இரவு நேரத்தில் தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது .அது பற்றியும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 வயது மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்தது என்ன..? பகீர் தகவல்கள்… 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு..!
