சேவல் சண்டை சூதாட்டம் – 4 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பெத்தநாயக்கனூர் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெத்தநாயக்கனூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி (வயது 26) கோட்டூர் மலையாண்டிபட்டினம் மணியன் (வயது 27) நித்தியானந்தம் ( வயது 28 )கௌதம் ( வயது 21 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.