கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று சாரதா மில் ரோடு காந்திஜி ரோடு சந்திப்பில் உள்ளபெட்டிக்கடை – மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா)மறைத்து வைத்து விற்பனை செய்ததாக போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த பிரகாஷ் (50 )தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பனூரைசேர்ந்த முருகானந்தம் ( 26 ) போத்தனூர் சாரதா மில் ரோடு வீர சூரிய பெருமாள் ( 50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .கடைகளில் இருந்த 4 கிலோ, 825கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை கடைகளில் 4 கிலோ குட்கா பறிமுதல் – 3 வியாபாரிகள் கைது..!
