கோவை ரயில் நிலையம் எதிர்புறம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 18ஆம் தேதி ஒருவர் அறை எடுத்து தங்கினார். லாட்ஜில் தனது முகவரியை நெல்லை மாவட்டம் திசையன்விளை, செந்தூரணி புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 44) என்று கொடுத்திருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து பார்த்த போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை லாட்ஜில் நெல்லை நபர் தற்கொலை..
